tamilnadu

img

தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு : அமைச்சர்

சென்னை:
தமிழகத்தில் 3,900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெங்கு குணப்படுத்தக் கூடிய நோய் தான். பெற்றோர்கள் விழிப்புணர்வோடு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே காய்ச்சல் பாதிப்பை முழுமையாக தடுக்க முடியும். தமிழகத்தில் 3,900 பேர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய அளவில் தமிழகத்தில்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவு. டெங்கு காய்ச்சலுக்கான பிரத்யேக அரசு மருத்துவர்கள் குழு உள்ளனர்.  காய்ச்சல் ஏற்பட்டால், காலம் தாழ்த்தாமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுங்கள். டெங்கு குறித்து தவறான வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

;