சுமைத்தூக்கும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், ஐஎஸ்ஓ தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், சுமைப்பணித்தொழிலாளர்களுக்கு தனிநலவாரியம் அமைக்கவேண்டும் வலியுறுத்தி கான்கார் சுமைப்பணித் தொழிலாளர்கள் சங்கத்தினர் புதனன்று (ஜூலை 31) திருவொற்றியூர் வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். வடசென்னை மாவட்ட பொதுச் செயலாளர் ஆர். அருள்குமார், நிர்வாகிகள் ஜி.கோதண்டம், பி.புஷ்பராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.