tamilnadu

img

நெடுஞ்சாலை சீரமைக்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

சென்னை,செப். 28- சென்னை திருவொற்றியூரை யொட்டியுள்ள  எர்ணாவூர் மகாலட்சுமி நகர் சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருப்பதை கண்டித்தும், சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் மனு கொடுத்து போராட்டம் நடைபெற்றது.   சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வட்டம் மகாலஷ்மிநகரில் இருந்து மணலி எக்ஸ்பிரஸ் இணைப்புச் சாலை கடந்த 10  ஆண்டுகளாக சீர்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் சாலை   குண்டும் குழியுமாக  உள்ளது. மேலும் மழைக் காலங்களில் சாலையில் தண்ணீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது.  இது குறித்து துறைசார்ந்த அரசு அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் திருவொற்றியூர் மாநகராட்சி மண்டலம் 1 அலுவலத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் பேசி இரண்டு நாளில் சாலையை சீரமைப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர்.  இந்த போராட்டத்திற்கு மகாலட்சுமி நகர் செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தலைவர் கதிர்வேல், முன்னாள் நகரமன்றத் தலைவர் ஆர்.ஜெயராமன்,  மாதர் சங்கம் மாவட்டச் செயலாளர் பாக்கியம், திருவொற்றியூர் பகுதி செயலாளர் புஷ்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;