tamilnadu

img

எதிர்ப்பவர்களையும் வென்றெடுக்கும் வகையில் அடுத்த 100 நாள் பணி.... முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..

சென்னை:
திமுக தலைமையிலான தமிழக அரசு ஆட்சியமைத்து 100 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்கும் வகையில் அடுத்த 100 நாட்களில் தமது பணி இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் இரண்டாவது நாளில், தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கு என்று தனியாக ஒரு நிதி நிலை அறிக்கை ஆக.14 அன்று தாக்கல் செய்யப்பட்டது.நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல் வம் தனது உரையை முடித்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் 100 நாள் நிறைவையொட்டி ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்தும் முதலமைச்சருக்கு வாழ்த்து கூறியும் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.

அதன்பிறகு, ஏற்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் கூட தற்போது தேர்தல் நடத்தினால் வாக்களிப் பார்கள். எனவே, திமுக அரசின் மீதான எதிர்பார்ப்பு அந்த அளவுக்கு அதிகரித்துள் ளது” என்றார்.100 நாள்களை நிறைவு செய்ததற்கு நீங்கள்(சட்டமன்ற கட்சித் தலைவர்கள்) பாராட்டுகிறீர்கள். ஆனால், அடுத்து வரும் காலம் பற்றியே எனது நினைப்பு இருக்கிறது” என்றும் முதலமைச்சர் கூறினார்.திமுக ஆட்சிக்கு வந்து முதல் ஒரு மாதம் கொரோனா பெரும் தொற்றை எதிர்க்கொண் டது. எங்கு பார்த்தாலும் ஆம்புலன்ஸ் சத்தமே அதிகமாகக் கேட்டது. மருத்துவமனையில் படுக்கை இல்லை, ஆக்சிஜன் இல்லை என அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்தன. கொரோனாவைத் தடுக்க ‘கட்டளை அறை’ (வார் ரூம்) அமைத்து அரசு துரிதமாக மேற்கொண்ட நடவடிக்கைகளையும் முதலமைச்சர் சுட்டிக் காட்டினார்.ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் செய்துள்ள பணிகள், சாதனைகளை பட்டியலிட தற்போதைக்கு நேரம் இல்லை. மற்ற மற்ற சந்தர்ப்பங்களில், அமைச்சர்களும் சொல்லுவதற்கு தயாராக இருக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப் படியாக நிச்சயம் நிறைவேற்றப்படும். அதில் மாற்றுக் கருத்து, சந்தேகம் தேவையில்லை. இது எனது அரசல்ல. நமது அரசு. ஆகவே, வருங்கால சந்ததியினர் நமது அரசின் சாதனைகளைப் பற்றி பெருமையாக பேச வேண்டும்.நம்பிக்கை தரும் நாட்களாக 100 நாள் ஆட்சி அமைந்துள்ளது. வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாள்களில் பணிகள் இருக்கும். கருணாநிதி இருந்து செய்ய வேண்டியதை அவர் மகனாக இருந்து நான் நிச்சயமாக செய்வேன். 

இந்த 100 நாளில் திமுக அரசு செய்த சாதனையைத்தான் பெரிய சாதனையாகக் கருதுகிறேன் என்றும் கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.முன்னதாக சட்டப்பேரவையில் லைவர்கள் பேசியது வருமாறு:

துரைமுருகன் (அவை முன்னவர்) : இன்றைக்கு மூன்று வரலாற்று நிகழ்வுகள் நடந்துள்ளன. இதில் ஒன்று. ஆட்சியின் 100வது நாளை நிறைவு செய்திருக்கும் முதலமைச்சரை திமுக சார்பில் நானும் பாராட்டுகிறேன். கொரோனா என்னும் நெருப் பாற்றில் நீந்திகொண்டு போராடிக் கொண்டு வரும் நமது முதல்வர், அந்த வைரஸ் தொற்றின் தொப்புள் கொடியை அறுத்தெறிவார்.
அடுத்ததாக, நாட்டிலேயே முன்னோடியாக மற்ற மாநிலங்களுக்கு வழிக்காட்டும் வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவதாக ஆயிரம் ஆயிரம் தடைகளை தாண்டி சட்டப்போராட்டங்களை எதிர்கொண்ட நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டமும் தொடங் கப்பட்டுள்ளது.நாகைமாலி (சிபிஎம்): தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் வேளாண்மைக்கு என்று தனியாக ஒரு நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்திருப்பதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். உணவு உற்பத்தி பெருக்கத்திற்கும் விவசாயிகளின் நலன்களுக்காகவும் பல்வேறு திட்டங்களைஅறிவித்துள்ளதும் வரவேற்கக்கூடியதாகும். திருச்சி-நாகை மாவட்ட பகுதிகளை வேளாண் பெருந்தடமாக அறிவித்திருப்பதற்கு நாகை மாவட்ட மக்களின் சார்பில் அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதே நேரத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கீழ்வேளூரில் ஒரு வேளாண்மை கல்லூரி துவக்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சிக்காலத்தில் மேற்கொண்டு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதுகுறித்து அறிவிப்பு வேளாண்மைத்துறை நிதி நிலை அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம் ஆனால், இடம்பெறவில்லை. திமுக தேர்தல் அறிக் கையில் சொல்லப்பட்ட அந்த அறிவிப்பை முதலமைச்சர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். ஆட்சி பொறுப்பை ஏற்று 100வது நாளை நிறைவு செய்திருக்கும் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.இராமச்சந்திரன் (சிபிஐ) : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, கடந்த நூறு நாட்களில் விடியலின் ஒளி கீற்றாக அமைந்திருக்கிறது. வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வந்தது நாட்டின் ‘டாப் 10 முதல்வர்கள்’ பட்டியலில் இடம் பிடித்திருப்பதை பாராட்டுகிறோம்.காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந் தகை, விசிக சிந்தனை செல்வன், பாமக ஜி.கே. மணி, மதிமுக சதன்திருமலை குமார், பாஜக ஆர்.காந்தி, வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்டோரும் பாராட்டிப் பேசினர்.

;