தி.மலை, செப். 15- கிராம சுகாதார செவிலி யர் சங்கத்தின் மாவட்டப் பேரவை தலைவர் ஆர்.கலா தலைமையில் திரு வண்ணாமலையில் நடை பெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் பருதி மால் கலைஞன், மணி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். பழுதடைந்த அரசு துணை சுகாதார நிலை யங்களை சீரமைக்க வேண்டும், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கணினி ஆப்ரேட்டரை நிய மனம் செய்ய வேண்டும், பிறப்பு, இறப்பு நிகழ்வு கள் ஏற்பட்ட மருத்துவமனை யிலிருந்து, சம்மந்தப்பட்ட நிலையங்களுக்கு இ.மெயில் மூலமாக, தகவல் தெரிவிக்க வேண்டும், வட்டார மருத்துவமனைக ளில் ஒவ்வொரு மாதமும் கிராம சுகாதார செவிலியர் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைவராக ஆர்.கலா, செயலாளராக டி.பி.புனிதா, பொருளாளராக கண்ணா கனகவள்ளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.