tamilnadu

சென்னை மாநகரில் தலித் மக்கள்... 1ம்பக்கத் தொடர்ச்சி....

1ம்பக்கத் தொடர்ச்சி....

வாரிய அதிகாரிகளோ சென்னை மாநகரத்திற்கு ள்ளேயே குடியமர்த்துவதற்கு வாய்ப்பிருந்தும் அதற்கு மாறாக, மணலி புதுநகரில் கட்டப்பட்டுள்ள குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் ஒதுக்குவது ஆலோசிப்பதாகவும் கூறுகின்றனர். அதிலும் மணலி புதுநகரில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் சுமார் 1.5  லட்சம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே வீடுகளை ஒதுக்க பரிசீலிக்கப்படும் என குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

கூவம், பக்கிங்காம் மற்றும் அடையாறு கால்வாய் ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருபவர்களுக்கென கட்டப்பட்ட கேசவப்பிள்ளை பூங்கா 1056 குடியிருப்புகளில் கூவம் கரையோரம் சத்தியவாணிமுத்து நகரில் வசித்த குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்க மறுப்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல.சென்னை மாநகரத்திற்குள்ளேயே வாழும் தலித் மக்கள் குடியிருப்பதற்கான வாழ்வாதார உரிமையை மறுக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. கூவம் கரையோரம் குடியிருந்த மக்களுக்கு மறுக்கப்படும் அதே வீடுகள் மற்றவர்களுக்கு பணத்தின் அடிப்படையில் ஒதுக்குவது என எந்த அடிப்படையில் முடிவெடுத்து குடிசைப்பகுதி மாற்று வாரியம் செயல்படுகிறது என்பதை விளக்க வேண்டும். குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் இத்தகைய செயல்பாடுகள், அது உருவாக்கியதன் நோக்கத்தையே சிதைக்கக் கூடிய செயலாக அமைந்துவிடும். 

தலித் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு உட்கூறு திட்ட நிதியில் உள்ள  கோடிக்கணக்கான ரூபாய்களை செலவழிக்காமல், மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கும் தமிழக அரசு,அந்நிதியை பயன்படுத்தி, சென்னை மாநகரத்திற்குள்ளேயே ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கான வீடுகளை ஒதுக்குவதற்கு முன்வர வேண்டும். குறிப்பாக, இப்போது சத்தியவாணிமுத்து நகரில் இருந்து கடைசி கட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் என அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு கேவசப்பிள்ளை பூங்கா திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 வீடுகளில், வீடுகள் ஒதுக்கீடு செய்து இம்மக்களின் வாழ்வாதார உரிமையை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;