tamilnadu

img

திமுக கூட்டணிக்கு தலித் கிறித்துவர் விடுதலை இயக்கம் ஆதரவு

விழுப்புரம்.அக்.18- இதுகுறித்து தலித் கிறித்துவர் விடுதலை இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் மாநிலத் தலைவர் எம்.மேரிஜான் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில், நடந்து முடிந்த மக்கள வைத் தேர்தலில் ஆதரவு அளித்ததை போலவே விக்கிரவாண்டி,  நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய இடைத்தேர்த லில் போட்டியிடும் மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் களுக்கு முழு ஆதரவு அளிப்பது என்று முடிவு  செய்யப்பட்டது. மேலும் தலித் கிறித்துவர்களை எஸ்.சி  பட்டியலில் சேர்க்கும் கோரிக்கையை பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சினர் பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் டி. தானிவேல், மாநில செயல் தலைவர் சி. ஆரோக்கியதாஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்