tamilnadu

சுங்கச்சாவடிகள் குறைக்கப்படும்... அமைச்சர் எ.வ.வேலு...

சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப் பது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவா`ஹிருல்லா சிறப்பு கவன ஈர்ப்பை கொண்டுவந்து பேசுகையில், “ ஒன் றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சுங்கசாவடிகளில் 15 ஆண்டுகளை கடந்த பிறகும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் கந்துவட்டி போல வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரனூரில் 536 கோடிக்கு ரூபாய் வசூலிக்க வேண்டியதற்கு 1,098 கோடி வரைக்கும் வசூலித்து தமிழ்நாட் டில் “பொருளாதார தாக்குதல்” நடத்தப் பட்டுள்ளதை கட்டுப்படுத்துவதற்கும், தேவையில்லாத சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த ஏப்ரல் மாதமும், செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்தும் இந்த சுங்க கட்டணங்களில் விதிமுறைகளை மீறி கட்டணம் உயர்த் தப்பட்டுள்ளதையும் அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, “நகர் பகுதிகளில் இருந்து 10 கி.மீட்டருக்குள் இருக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்கிற விதி உள்ளது. இதையடுத்து பரனூர், வானகரம், சென்ன சமுத்திரம் உள்ளிட்ட 4 சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார்.

இந்த பிரச்சனைக்காக தில்லி சென்று முறையிட முதலமைச்சர் அறிவுறுத்தி உள் ளார். தமிழகத்தில் நெடுஞ்சாலை விதிகளின் படி 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும். ஆனால் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக இருக்கும் சுங்கச்சாவடிகளை குறைக்கவும் ஒன்றிய அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வேலு தெரிவித்தார்.

;