tamilnadu

img

மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு....

சென்னை:
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவியதை தொடர்ந்து கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டது. பின்னர் 2 வார காலத்துக்கு முழு ஊரடங்கு அமலில் இருந்தது.நோய் தொற்று சற்று குறைய ஆரம்பித்ததை அடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகுஒவ்வொரு மாத இறுதியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிபுணர் குழு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தளர்வுகளை அறிவித்து வருகிறார்.தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா? என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம்? என்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று(ஜூலை30) நடைபெற்றது. இதில் அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர்  ராதா கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சற்று அதிகரித்துள்ளது. எனவே அதை கருத்தில் கொண்டு இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கை ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதிகாலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எவ்வித மாற்றமின்றி தொடரும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித் திருக்கிறார்.

;