tamilnadu

img

ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு..... தமிழக முதல்வர் உத்தரவு....

சென்னை:
தமிழ்நாட்டில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வருகிற 14-ஆம் தேதி வரைக்கும் ஒருவார காலத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் வரும் 7 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் பொது முடக் கத்தால் மாநிலம் முழுமைக்கும் ஓரளவுக்கு வைரஸ் பரவலை கட்டுக் குள் கொண்டு வர முடிந்துள்ளது. ஆனாலும், கோவை, திருப்பூர், மதுரை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாகவே உள்ளது. 

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனையில் மேலும்ஒருவார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர் குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைகளை ஆய்வு செய்த முதலமைச்சர், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வருகிற 14 ஆம் தேதி வரைநீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.தற்போது வைரஸ் தொற்று வேகமாக குறைந்து வருவதால் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் உள் ளிட்ட 27 மாவட்டங்களிலும் மேலும்,சில தளர்வுகளுடன் பொது முடக்கம்நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் சில தளர்வுகள் கொடுக்கப் பட்டுள்ளன. 

போக்குவரத்துக்கு தடை
இரு பிரிவுகளாக பிரித்து சில தளர்வுகள் வழங்கப்பட்டாலும், தமிழ் நாடு முழுவதும் பேருந்துஉள்ளிட்ட பொது போக்குவரத்திற் கான தடை வருகிற 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், வாடகை வாகனங்கள், டாக்ஸி, ஆட்டோக்களில் பயணிப்பவர் இ-பதிவுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. வாடகை டாக்சியில் ஓட்டுநர் தவிர மூன்று நபர்களும்ஆட்டோக்களில் ஓட்டுநரை தவிர்த்துஇரண்டு பேரும் பயணிக்க தமிழ்நாடுமுழுவதும் அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.

சுற்றுலா தலங்கள் மூடல்
இந்த ஊரடங்கு காலத்தில் நீலகிரி, கொடைக்கானல், குற்றாலம், ஏற்காடு, கன்னியாகுமரி, ஏலகிரி உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பயணிகள் செல்ல தொடர்ந்து தடைநீடிக்கப்பட்டுள்ளது.
மது, தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லைதமிழ்நாடு முழுவதும் ஜூன் 14 ஆம் தேதி வரைக்கும் பொது முடக்கம் நீட்டிக்கப் பட்டுள்ளதால் மது கடைகளுக்கு எவ்வித தளர்வும்அளிக்கப்படவில்லை. கடைகள் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல், தேநீர் மற்றும் சலூன் கடைகளையும் திறப்பதற்கு மாநில அரசு அனுமதி தரவில்லை. மேலும் எவ்வித தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.

மளிகை - காய்கறி
தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை6 மணி முதல் மாலை 5 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளது.பொது முடக்க காலத்தில் பொதுமக்கள் காய்கறி, பழங்கள் வாங்கசிரமப்படாமல் இருக்க வாகனங்கள்மூலம் நடமாடும் காய்கறி பழங்கள்விற்பனையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பத்திரப்பதிவு...
மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்கள் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் தினசரிஇயங்க அனுமதிக்கப் படுகிறது. நாளொன்றுக்கு 50 பக்கங்கள் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவுமேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட் டுள்ளது.

;