போதைக்கு எதிராக கிரிக்கெட்!
போதைப் பழக்கத்திற்கு எதிராக ஞாயிறன்று (மே 18) கண்ணப்பர் திடல் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டக்குழு இந்தப்போட்டியை நடத்தியது. போட்டி துவக்க நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆர்.கிருஷ்ணகுமார், வாலிபர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்டத் தலைவர் ஜெ.பார்த்திபன், செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் லொ.விக்னேஷ், ஆர்.பிரியதர்ஷினி எம்.சி, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க மூத்த தலைவர் எம்.சந்திரன், பொருளாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.