tamilnadu

img

ஆத்துப்பாக்கம் ஊராட்சித்தலைவர் தேசியக்கொடியேற்றிய நிகழ்ச்சி திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்துக்கு சிபிஎம் பாராட்டு.....

சென்னை:
கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சிமன்ற த்தின் தலைவராக பொறுப் பேற்றுள்ள திருமதி  அமிர்தம் அவர்கள் பட்டியலின சாதியை சேர்ந்தவர் என்பதால் 74வது சுதந்திர தினத்தன்று அவரை  தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுத்து அவமதித்துள்ளனர். 

மேலும், அவரை ஊராட்சிஅலுவலகத்திற்குள் அனு மதிக்காமலும், ஊராட்சி அலு வலகத்திற்குள் நாற்காலியில் அமரக்கூடாது என்றும், நூறுநாள் வேலையை பார்வை யிடக் கூடாது எனவும், கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது எனவும் பல்வேறு நெருக்கடிகளை  அவருக்கு கொடுத்துள்ளனர். நாடு சுதந்திரம் பெற்ற 74வது ஆண்டில் கூட இப்படிப்பட்ட கொடுமை நீடிப்பது வேதனைக்குரியது. அந்த அளவுக்கு சாதிய ஆதிக்கம் உச்சத்தில் உள்ளது. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மேற்கண்ட நிகழ்வு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற  தொலைக்காட்சி நிருபர் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து எங்களது கட்சியின் திருவள்ளுர் மாவட்டக்குழு,  ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாக த்திற்கு புகார் அளித்துள்ளனர்.  

உரிமை நிலைநாட்டல்
மேற்கண்ட சம்பவம் குறித்துவிசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், வியாழனன்று (20.8.2020) ஆத்துப்பாக்கம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி அமிர்தம் அவர்களை  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்ற வைத்து அவரது உரிமையை நிலைநாட்டி யுள்ளது.   திருவள்ளூர் மாவட்டஆட்சித்தலைவரும்,  மாவட்டகாவல்துறை கண்காணிப்பாள ரும் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி அமிர்தம் அவர்களை கொடியேற்ற விடாமல் செய்தது, ஊராட்சித்தலைவர் தன்னுடைய  பணிகளை செய்ய விடாமல் தடுத்தது மட்டுமின்றி அவரைஅவமதித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு தண்டிக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.இப்படிப்பட்ட சாதிய ஆதிக்கம் தமிழகம் முழுவதும் நிலவுகிறது. பெண் ஊராட்சித் தலைவர்கள் சுயேச்சையாக செயல்பட முடிவதில்லை. எனவே, ஊராட்சி மன்றங்களில் பட்டியலின சாதி மக்களும், பழங்குடியின மக்களும், பெண்களும் முழுமையாக பணியாற்றவும், எந்தவித அச்சமுமின்றி சுதந்திரமாக செயல்படவும்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

;