மாற்றிடம் வழங்கிய பின்னரே வீடுகளை அகற்ற வேண்டும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரிடம் சிபிஎம் மனு
திருவள்ளூர், ஜூன் 24- ஈகுவார்பாளையத்தில் குடியிருக்கும் வீடுகளை அகற்று வதற்கு முன்பு, மாற்று இடம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில், பாதிக்கப்பட்ட மக்கள் கும்மிடிப் பூண்டி வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஈகுவார்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் கால்நடைகள் வளர்ப்பது முக்கிய தொழிலாகும். பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி முதல் மாதர்பாக்கம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்கம் செய்யும் பணி, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த சாலையை விரிவுப்படுத்தும் பணி யின் போது பட்டா நிலத்தில் உள்ள வர்கள், புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்கள் என 30 க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். பல தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தை விட்டு விட்டு, குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர்களை வைத்துக்கொண்டு எங்கே செல்வது என்று தெரியாமல் அப்பகுதிமக்கள் தவித்து வருகின்றனர். சாலை அமைக்க அளவீடு செய்த தில் கூட முறைகேடு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தான் எப்போதும் சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மாற்றிடம் கோரி சிபிஎம் வேண்டுகோள் இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று (ஜூன் 24) கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் க.சுரேஷ்குமாரை சந்தித்து மனு அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் மேலும் மாற்றிடம் வழங்கும் வரையில் வீடுகளிலிருந்து அம்மக்களை அகற்ற கூடாது என வலியுறுத்தினர். இந்த பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் ஆகை யால் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோரிடம் மனுவை கொடுங்கள் என்றார். எந்த வகை புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடத்தில் குடிமனை பட்டா வழங்க வேண்டும், இந்த சாலை விரிவாக்க திட்டத்தை எந்த வீடுகளுக்கும் சேதம் ஏற்படாத வகையில் மாற்றுப்பாதையிலும் கொண்டு செல்ல வழியுள்ளது எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதில் கட்சியின் வட்டச் செய லாளர் டி.கோபாலகிருஷ்ணன், வட்டக்குழு உறுப்பினர்கள் ப.லோக நாதன், எம்.வெங்கட்டாதிரி, ஈகுவார்பாளையம் கிளை செய லாளர் அ.ரவி, விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் பி.கருணாமூர்த்தி, டி.தியாகராஜன், கே.கோபி மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.