சிதம்பரம், ஜூலை 9- கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ் ஜி ரமேஷ்பாபு, பரங்கிப்பேட்டை பேரூர் செயலாளர் வேல்முரு கன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஏ விஜய், அசன் முகமது, நகர்குழு உறுப்பினர்கள் பாண்டியன் பாலமுருகன் உள்ளிட்டோர். பரங்கிப்பேட்டை பேரூராட்சி செயல் அலு வலரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் மக்கள் பயன்பாட்டிற்கு அதிநவீன குடிநீர் பயன்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் பயன்படாமல் இருக்கும் குடிநீர் தொட்டியை அகற்றி பேருந்து நிறுத்த வசதி செய்து தர வேண்டும். சஞ்சீவிராயர் கோவில் பகுதியில் நவீன கழிப்பிடம் அமைக்க வேண்டும். பரங்கிப்பேட்டை பகுதியில் நடைபெறும் புதிய சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். குமத்துப்பள்ளியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான வாட்டர் டேங்க் தொட்டியில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.