tamilnadu

img

புதுவை முதல்வருடன் சிபிஎம் தலைவர்கள் சந்திப்பு

புதுச்சேரி, ஜன. 30- புதுச்சேரி முதல்வரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர்கள் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசச் செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமையில் முதல்வர் நாராயணசாமியை சட்டப் பேரவையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவின் விவரவம் வரு மாறு:- மத்திய பாஜக அரசு அறி வித்துள்ள இந்திய மக்களை பிரிக்கும்,  மதச்சார்பற்ற ஜனநாயக ஸ்திரத்தன் மைக்கு அச்சுறுத்தல்களை விளை விக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய சட்டங்  களுக்கு எதிராக கடந்த 2 மாதங்க ளுக்கு மேலாக இந்திய நாடு முழுவ தும் மாணவர்கள் இளைஞர்கள் பெண்  கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும்  தன்னெழுச்சியாக போராடி வரு கின்றனர். புதுச்சேரி மாநிலத்திலும் இச்சட்டங் களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வரு கின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை  புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று தங்கள் அரசும் உறுதி  அளித்துள்ளதற்கு  நன்றியை தெரி வித்துக்கொள்கிறோம்.  மேலும், புதுச்சேரி சட்டமன்றத்தில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங் களை அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றி, மக்கள் போராட்டங்களுக்கு வலு சேர்ப்பது ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையாகும்.  இச் சட்டத்தை உள்துறை அமைச்ச கம் அமல்படுத்தாத வகையில் தடுப்பு மையங்களை ஏற்படுத்தவேண்டும்.  அது போன்ற முயற்சிகளுக்கு புதுச்சேரி அரசு அனுமதி அளிக்கக் கூடாது. அரசு தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் என்ஆர்சி, என்சிஆர் சட்டங்  களை அமல்படுத்த பள்ளிக் குழந்தை கள் மூலம் முயற்சிகள் நடக்கின்றன அதையும் தாங்கள் உடனடியாக தலை யிட்டு தடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப் பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது கட்சியின் மத்தி யக் குழு உறுப்பினர் சுதா, தமிழ் மாநி லக்குழுஉறுப்பினர் வெ. பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, ராமச்சந்திரன் இடைக்குழுச் செயலா ளர்கள் நடராஜன், மதிவாணன் ஆகி யோர் உடனிருந்தனர்.

;