சென்னை, ஏப். 21 - தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததையொட்டி திமுக தலைவரும், தமிழ்நாடு முத லமைச்சருமான மு.க.ஸ்டாலினை ஞாயிறன்று (ஏப்.21) அவரது இல் லத்தில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் ஆகியோர் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
18வது மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறுகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந் தியா கூட்டணியை ஒருங்கிணைத்தது, அதிமுக-பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்தை வலுவாக மேற்கொண்டது, கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டது உள்ளிட்ட பல்வேறு பணிகளை முதலமைச்சர் மகத்தான முறையில் செய்தார்.
பரப்புரையில் பாஜகவை, மோடி யின் மோசமான செயல்களை அம்பலப் படுத்தியும்; மோடி அரசு நீடித்தால் நாடு எப்படிப்பட்ட மோசமான நிலைமை களை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதையும், ஓய்வு உறக்கமின்றி மணிக்கணக்கில் பேசினார். இந்தியா கூட்டணியும் வலுவான பிரச்சாரத்தை மேற்கொண்டது.
இந்த பரப்புரையினால் கூட்டணி வேட்பாளர்கள் 40 பேரும், பதிவான வாக்குகளில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக பெற்று மகத்தான வெற்றி பெறுவார்கள் என்ற நிலை உருவாகி உள்ளது. தேர்தல் போராட்டத்தை யுத்தத்தை போல் முதலமைச்சர் தலைமையேற்று நடத்தினார். எனவே, முதலமைச்சரை நேரடியாக பாராட்டி, நன்றி தெரிவித்தோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிற திண்டுக்கல், மதுரை தொகுதிகளில் திமுக பொறுப் பாளர்கள், அமைச்சர்கள், தொண்டர் கள் என அனைவரும் மகத்தான பணி யாற்றினர்கள். இந்தியா கூட்டணி கட்சி களின் தலைவர்கள் அனைவரும் இணக்கமாக பணியாற்றினார்கள். இந்த தொகுதிகளிலும் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிற நிலை உருவாகியுள்ளது. அதற்கும் முதல மைச்சருக்கு நன்றி தெரிவித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தோல்வியை மறைக்க பாஜக குற்றச்சாட்டு
லட்சக்கணக்கில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கே. பாலகிருஷ்ணன், “இந்த குற்றச்சாட்டு க்கு தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். தேர்தல் ஆணையம் தான் வாக்காளர் பட்டியலை தயா ரிக்கிறது. வாக்காளர்களை சரி பார்த்தல், நீக்குதல், சேர்த்தல் போன்ற பணிகளை செய்கிறது.
பலமுறை அனைத்துக் கட்சி கூட் டத்தையும் ஆணையம் நடத்தி உள் ளது. அப்போதெல்லாம் வாக்காளர் பட்டியலில் குறை இருப்பது தெரியவில்லையா? தேர்தல் முடிந்த பிறகு புகார் சொல்வது, ஏற்பட உள்ள தோல்விக்கு இப்போதிருந்தே சப்பைக்கட்டு கட்ட தொடங்கிவிட்டனர் என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும்.
வாக்காளர் பட்டியலில் குறை இருந்தால் அதற்கு தேர்தல் ஆணை யம்தான் பொறுப்பு. வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களை மாநில அரசு நீக்க முடியாது என்பது குற்றம் சொல்கிறவர்களுக்கும் தெரியும். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல குற்றச்சாட்டை கூறி வைக்கிறார்கள். வாக்குப்பதிவு முடிந்த பிறகு தோல்வி யை மறைக்க ஏதாவது ஒரு கார ணத்தை சொல்லி வைக்க வேண்டும் என்பதால் இப்படி அவர்கள் பேசுகிறார்கள்.” என்றார்.
குழப்பம்
வாக்குப்பதிவு விழுக்காடு விபரம் தெரிவிப்பதில் குழப்பம் நீடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே.பால கிருஷ்ணன், “ஒவ்வொரு வாக்குச்சாவ டியிலும் பதிவாகும் வாக்கு விவர மானது படிவம் 17 வாயிலாக தெரி விக்கப்படுகிறது. ஒரு சட்டமன்ற தொகு திக்கு 200க்கும் மேற்பட்ட வாக்குச்சா வடிகள் உள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளில் இருந்தும் விவரங்களைத் திரட்டி கணக்கீடு செய்வதில் சற்று காலதாமதம் ஏற்படும். முதலில் ஒரு விழுக்காடு அறிவிக்கப்படும். பிறகு இறுதியாக சரியான வாக்கு விழுக்காடு அறிவிக்கப்படும். கடந்த தேர்தலிலும் இதுபோன்று நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையம் திடீரென்று ஒரு சில தொகுதிகளில் 10-12 விழுக்காடு வாக்கு குறைந்துள்ளது என்று அறிவித்ததுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவ்வளவு குறைய வில்லை என்பது இப்போது தெரிய வந்துள்ளது. தேர்தல் முடிந்ததும் உட னடியாக அறிவிக்கப்படும் அளவிற்கும் இறுதியாக அறிவிக்கப்படும் போது 0.5 முதல் 2 விழுக்காடு வரை வித்தியாசம் ஏற்படும். தலைமைத் தேர்தல் ஆணையம் எப்படி கணக்கிட்டது என்று தெரியவில்லை? அதை ஒழுங்குபடுத்தி வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்கள்” என்றார்.
வண்ணத்தை மாற்றி...
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், “தூர்தர்ஷன் இலச்சினையின் வண்ணம் காவி வண்ணத்திற்கு மாற்றப் பட்டுள்ளது. வண்ணத்தை மாற்றி ஆட்சியை தக்க வைக்க முடியாது. ஜூன் 4ஆம் தேதியோடு பாஜக ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. ஆட்சியில் இருந்தபோது மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல், ஆர்எஸ்எஸ் திட்டங்களைத் திணித்துக் கொண்டி ருந்தார்கள்.
தேர்தல் காலத்திலும் வண்ணம் பூசுவது, பெயரை மாற்றுவது, இந்தி யை திணிப்பது போன்றவற்றை செய்கின்றனர். பாஜக எவ்வாறு ஆட்சி செய்கிறது என்பதற்கு இதெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு” என்றும் அவர் கூறினார்.
முன்பாக, முதல்வருடனான சந்திப்பின் போது மத்தியக்குழு உறுப்பி னர் பெ.சண்முகம், மாநிலச் செயற் குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், என். குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.