tamilnadu

img

பிரச்சார களத்தில் சிபிஎம்...

ஓசூர் ஒன்றியம் நல்லூர் 8 வது வார்டில் கோதண்டராமனுக்கும், தளி ஒன்றியம் காரண்டபள்ளி 19வது வார்டில்  வெங்கடேஷூக்கும், அஞ்செட்டி 24 வது வார்டில் வென்ணிலாவுக்கும், கெலமங்கலம் ஒன்றியம் சந்தனப்பள்ளி 30 வது வார்டில் வீணாவுக்கும் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் காட்டேரி வார்டில் கோவிந்தசாமிக்கும், காவேரிப்பட்டினம் ஒன்றியம் சந்தாபுரம் 11 வது வார்டில் சசிகலாவுக்கும் அரிவால் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கும்  வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர்  எஸ்.ஆர்.ஜெயராமன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். நொகனூர் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடும்  சகுந்தலாவிற்கு உருளை சின்னத்திற்கும், நாகொண்டப் பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் வேட்பாளர் முனி நஞ்சப்பாவுக்கு ஏணி சின்னத்திலும் வாக்குகள் கோரினர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ச.விக்கிர மன், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நந்தினி நரேஷ் ஆகியோருக்கு மாநிலக் குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், பி.செல்வன், சிவாஜி உள்ளிட்ட பலர் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தனர்.

;