tamilnadu

img

உள்ளட்சித் தேர்தல் நடைமுறையை மாற்றியதற்கு சிபிஎம் கண்டனம்

சென்னை:
நவம்பர் 19அன்று சென்னையில் நடைபெற்ற சிபிஎம் மாநிலக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானம் வருமாறு:

நவம்பர் 19 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுவரையில் நடைமுறையில் இருந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் நேரடி தேர்தலைமாற்றி மறைமுக தேர்தலாக நடத்துவது என முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையின் இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.மேற்கண்ட தலைவர்களை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்க தேவையான மக்கள் ஆதரவு தங்களுக்கு இல்லை என்ற காரணத்தினாலும், இம்முறையினால் அதிமுகஅணி தேர்தலில் படுதோல்வியை சந்திக்க நேரிடும் என்ற காரணத்தினாலும் தேர்தல் முறையையே மாற்றியமைக்க அதிமுக அரசு முடிவு மேற்கொண்டுள்ளது. கவுன்சிலர்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க வகை செய்வதின் மூலம் கவுன்சிலர்களை கடத்துவதற்கும், குதிரை பேரம் செய்வதற்கும், தேர்தல் முடிவுகளை அதிகாரிகளைக் கொண்டு முறைகேடாகஅறிவிப்பதற்கும் வழி ஏற்படும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.எனவே, அதிமுக அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டித்தும், மீண்டும் பழைய முறைப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வை நேரடியாகநடத்திட வற்புறுத்தி அனைவரும் கண்டனக் குரல் எழுப்பிடவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தமிழகத்தில் கடந்தமூன்றாண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை அதிமுக அரசு நடத்தாமல் தள்ளிப்போட்டு வந்துள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் இறுதியாக டிசம்பர் 13ஆம் தேதிக்குள் தேர்தல் அட்டவணையை வெளியிட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதிமுக அரசு இந்த உத்தரவையும் மீறி தேர்தலை மீண்டும் தள்ளி வைக்கும் வகையில்குழப்பமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு நேரடி தேர்தலை மறைமுகமாக மாற்றியமைப்பது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான இடஒதுக்கீடு முறையை அறிவிக்காமல் காலம் கடத்துவது, வார்டு மறுவரைகள் செய்யப்பட்ட இடங்களில் வந்துள்ள முறையீடுகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தள்ளிப்போடுவது போன்றவைகள் மூலம் தேர்தலைஎப்படியாவது நடத்தாமல் தள்ளிப்போடும் உள்நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.மூன்றாவது ஆட்சிமுறை எனப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தாமல் இருக்கும் அதிமுக அரசுக்குசிபிஐ (எம்) மாநிலக்குழு வன்மையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத ரணத்தால் உள்ளாட்சி நிர்வாகம் சீர்குலைந்து மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து டெங்கு, டைபாய்டு போன்ற விஷக் காய்ச்சல்கள் அதிகரித்துமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத காரணத்தினால் மத்திய அரசின் மூலம் கிடைக்க வேண்டிய சுமார் ரூ. 5000 கோடி தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே, உள்ளாட்சித் தேர்தலை உச்சநீதிமன்ற உத்தரவின்அடிப்படையில்  அனைத்து சட்டரீதியான பணிகளையும் நிறைவுசெய்து 2019 டிசம்பர் 13ந் தேதிக்குள் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டு உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டுமென சிபிஐ(எம்) மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

;