சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கிருந்தீர்கள் என ஜெ.தீபா தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.போயஸ் கார்டனிலுள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது மற்றும் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா தொடர்ந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரமில்லை என தீபா தரப்பில், வாதிடப் பட்டது. இதையடுத்து வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்த நீதிபதி, அதற்கு இடைப்பட்ட காலத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை கையகப்படுத்த தடை விதிக்க மறுத்து விட்டார்.