சென்னை,பிப்.12- சாவர்க்கர் வழியில் வந்தவர் களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களும், சட்டப்பேரவை உறுப் பினர்களும் பதிலடி தருவதில் சளைத்தவர்கள் அல்ல என பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் பிப்.12 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி யது. தலைமைச் செயலகத்திற்கு வந்த ஆளுநர் ரவியை, பேரவை தலைவர் மு. அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி, பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற னர்.
பின்னர் மரபுப் படி பேரவைக் குள் அழைத்து வந்தனர். தமிழில் வணக்கம் சொல்லி தனது உரையை தொடங்கிய ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்து 3 நிமிடங்களில் முடித்துக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ஆளுநர் ரவி உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். பின்னர் உரையின் இறுதியில், “ஆளுநரை முறைப்படி அழைத்து, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை அவருடைய ஒப்பு தல் பெற்று அவரிடம் கொடுக்கப் பட்டது. அவர் அதை குறைவாக வாசித்தார். அதை நான் குறையாக சொல்ல வில்லை. பின் தேசிய கீதம் பாடியிருக்க வேண்டும் என ஆளுநர் பரிந்துரைத்தார். அனைவருக்கும் கருத்துகள் உள்ளன.
இதையெல் லாம் இங்கு பேசுவது மரபு அல்ல. உயர்ந்த பதவியில் இருக்கும் ஆளுநருடன் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரை இந்த அரசு, முதலமைச்சர், அமைச்சர் கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாண்போடு நடத்துகின்றனர். இது தான் தமிழ்நாடு அரசின் பண்பு, முதலமைச்சரின் பண்பு. அதேபோல் ஆளுநர் மனதில் இருப்பதை அவர் கூறினார்.
எங்கள் மனதில் இருப்பதை நான் கூறுகிறேன். தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெள்ளம், புயல் எல்லாம் ஏற்பட்டது. அதற்கு ஒன்றிய பாஜக அரசு ஒரு பைசாகூட நிதி தரவில்லை. ஆனால் பல லட்சம் கோடி ரூபாய் பி.எம்.கேர் நிதியாக உள்ளது.
நாட்டு மக்களால் கணக்கெழுத முடியாத, கணக்கு கேட்க முடியாத கணக்கில் இருந்தாவது, ரூ.50,000 கோடியை வாங்கி கொடுத்தால் நன்றாக இருக்கும். சாவர்க்கர் வழி யில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு பதிலடி தருவதில் தமிழர்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல” என காட்டமாக கூறினார்.