சென்னை: தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரானோ பரவி வருவது அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. சனிக்கிழமை வரை கொரானோ பாதிப்பு எண்ணிக்கை 42 ஆக இருந்த நிலையில் ஞாயிறன்று ஈரோடு மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரானோ பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறை ஐஆர்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எட்டுப்பேரில் நான்கு பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.