tamilnadu

கொரோனா வைரஸ்: 50 விழுக்காடு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு சென்னை துறைமுகத் தலைவர் தகவல்

சென்னை, மார்ச் 23- கொரோனா வைரஸ் பரவ லைத் தடுக்கும் வகையில் சென்னை  துறைமுகத்தில் 50 விழுக்காடு ஊழி யர்களுக்கு வார இடைவெளியில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க  உள்ளதாகவும், ஊழியர்கள் அனை வரும் உறுதிமொழி படிவம் ஒன்றை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு வந்தநாள் முதலே சென்னை துறை முகம் பல்வேறு தொடர் நடவடிக்கை களை எடுத்து வருகிறது. முதல்கட்ட மாக கப்பல் சிப்பந்திகள் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டு வெளியே  அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கப்பல்களிலிருந்து கீழே  இறங்கவே அனுமதிக்கப்பட வில்லை. மேலும் வரும் மார்ச் 31ஆம் தேதிவரை சுற்றுலா பயணிகள் கப்பல்களுக்கான அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் மேலும் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

ஊழியர்கள் உறுதிமொழிப் படிவம் வழங்க உத்தரவு
அனைத்து துழைவு வாயில்களி லும் பணிபுரியும் சி.எஸ்.எப். காவ லர்கள் தீவிர சோதனைக்கு உட்ப டுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய கிருமி நாசினி பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் துறை முக ஊழியர்களின் உறவினர்கள் எவ ரேனும் வெளிநாடுகளில் இருந்து அண்மையில் வந்திருக்கக் கூடும்.  ஒருவேளை அவர்களில் யாருக்கே னும் கொரோனா வைரஸ் பாதிப்பு  ஏற்பட்டிருந்தால் அந்த ஊழியர் மூலம்  இதர துறைமுக ஊழியர்களுக்கும் வைரஸ் கிருமி பரவக்கூடும் என்ற  அச்சத்தால் துறைமுகத்தில் பணிபுரி யும் ஊழியர்கள் சுமார் நான்காயி ரத்திற்கும் மேற்பட்டோர் அனை வருக்கும் உறுதிமொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. இரண்டு நாள்க ளில் இந்த பணி முழுமையாக கணக்  கிட்டு விட முடியும்.

50 விடுக்காடு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு
மேலும் திங்கட்கிழமையில் இருந்து ஊழியர்களில் 50 விழுக் காட்டினர் மட்டுமே வேலைக்கு வர  வேண்டும். மீதம் உள்ள 50 விழுக்  காட்டினர் வீட்டிலேயே தங்கி இருக்க  வேண்டும். வேறு எங்கும் செல்லக்  கூடாது. அதற்கு அடுத்த வாரம்  முதல்வாரம் பணிக்கு வந்தவர்க ளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் ஊதியம் வழங்குவதில் எந்த  பிடித்தமும் செய்யப்படாது. அதிகப்  படியானவர்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற சோதனை அடிப்படையில் இத்திட்டம் அறி விக்கப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் முழுமை யாகப் பயன்பபடுத்தி கொண்டு துறை முக நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு  அளிப்பார்கள் என எதிர்பார்க்கி றோம். கொரோனா வைரஸ் பிரச்ச னையால் ஏற்றுமதி, இறக்குமதி வெகு வாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் துறை முகங்களின் வருவாயிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை மதிப்பிட முடியவில்லை. இருப்பி னும் இந்த பேரிடரை நாம் எதிர்கொள்  வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.