tamilnadu

img

 மருத்துவருக்கு கொரோனா

 சென்னை ஏப்.11- சென்னை அசோக் நகர் அசோக் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள பொதுச் சுகாதார மையத்தில் (பப்ளிக் ஹெல்த் சென்டரில்) வேலை பார்த்து வரும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் சில நாட்களாக  விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனோ  வைரஸ்  மருத்துவ பரிசோதனை செய்து வந்துள்ளார்.  கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் பப்ளிக் ஹெல்த் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நேரத்தில் 26 பேர் இவரிடம் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். மேலும் இவருடைய குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் இவருடைய வெளி தொடர்பிலிருந்த 5 பேர் என மொத்தம் 36 பேருக்கு அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குச் சுகாதாரத் துறை மூலமாக அவர்களுடைய தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு மேற்படி அவர்களுக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக  தகவல் கொடுக்குமாறு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும்,  அந்த பொதுச் சுகாதார மையம் மூடப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த மருத்துவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.