tamilnadu

img

தமிழகத்தில் இன்று 5,791 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 791 பேருக்கு கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று 80 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்து 706 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 341 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 தமிழகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71 லட்சத்து 660 தொற்று மாதிரிகள் ஆர்டி-பிசிஆர் சோதனை மூலம் பெறப்பட்டுள்ளது.  இன்று 96 ஆயிரத்து 102 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. 68 லட்சத்து 88 ஆயிரத்து 043 பேருக்கு இதுவரை சோதனைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 94 ஆயிரத்து 200 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 80 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 9 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இன்று 5 ஆயிரத்து 706 பேர் குணமடைந்துள்ளனர்.