tamilnadu

img

திருவள்ளூர் அருகே ஆபத்தான பாலத்தில் தொடரும் வாகன போக்குவரத்து

திருவள்ளூர்,ஜன.2- திருவள்ளூர் அருகே உள்ள நாராயணபுரம் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கொசஸ்தலை ஆற்றில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான பாலம் உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரண மாக இந்த பாலம் சேத மடைந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பாலத்தில் எவ்விதமான சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளள் படவில்லை. மேலும்  இந்த ஆபத்தான பாலத்திலேயே வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. இதில் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரு கின்றன. பாலம் குறுகலாக இருப்பதுடன் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து உள்ளது. பாலத்தின் பக்க வாட்டு சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளன. இதன் காரணமாக பாலத்தில் செல்லும் கனரக வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். சில நேரங்க ளில் வாகனங்கள் பழுதாகி பாலத்தில் சிக்கிக் கொண்டால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் அருகில் புதிதாக பாலம் கட்டும் பணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் தேசிய நெடுஞ் சாலையை அகலப்படுத்தும் திட்டத்தின் கீழ், நிலம் கையகப்படுத்தாததால், புதிதாக மேம்பாலம் கட்டும் பணி பாதியில் நிற்கிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘பழு தான பாலத்தில் வாகனத்தில் செல்லவே அச்சமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதுபற்றி அதிகாரி கள் கண்டு கொள்வது இல்லை. தேசிய நெடுஞ் சாலை துறையினர் உடனடி யாக தரைப்பாலத்தை சரி செய்ய வேண்டும். மேலும், பாலம் முற்றிலும் இடிந்து விழுவதற்குள் புதிய மேம்பாலத்தை கட்டி முடித்து விபத்தை குறைக்க வேண்டும்’ என்றனர். மழை வெள்ள பாதிப்பு கள் மற்றும் சேதங்களை சீர் செய்ய அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ் சாலையில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள பாலம் மூன்று ஆண்டுகளாக சீர மைக்கப்படாமல் இருப்பது வேதனையாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

;