tamilnadu

அனகாபுத்தூரில் மந்தகதியில் குடிநீர் தொட்டி கட்டுமானப் பணி

தாம்பரம், ஜூலை 22- சென்னை புறநகர் பகுதிகளில் மிக வேக மாக வளர்ந்து வரும் அனகாபுத்தூர் பேரூ ராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50  ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கோடை காலம் வந்தாலே, இங்கு வசிப்ப வர்கள் காலி குடங்களுடன் குடிநீர் தேடி சுற்றி திரியும் அவலநிலை நீடிக்கிறது. இந்த நிலையை போக்க, தங்கள் பகுதி யில் புதிதாக ஒரு குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க  தொட்டி அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக தமிழக அரசிடம் அந்த பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, அங்கு பேரூராட்சி பூங்கா அருகே கடந்த 3  ஆண்டுகளுக்கு முன், சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 மேல்நிலை நீர்த்தேக்க  தொட்டி கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால் இந்த 2 குடிநீர் தொட்டிகளின் கட்டு மான பணிகளும் இன்றுவரை முழுமை யாக நிறைவு பெறவில்லை. பாதி கட்டிய  நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நீரை தேக்கி வைக்க இடமின்றி இருப்பதுடன், அப்பகுதி மக்களின் குடிநீர்  தேவையை பூர்த்தி செய்வதில் பேரூராட்சி  அதிகாரிகள் மெத்தனமாக செயல்படு கின்றனர். மேலும், இங்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் அங்கு பொருத்தப்பட்ட இரும்பு  தளவாடங்கள் மற்றும் கட்டடப் பொருட்கள் கீழே விழுந்து உயிர்ப்பலி ஏற்படும் அபாயம்  உள்ளது. தற்போது புதிய திட்டத்தின்கீழ், அன காபுத்தூர் மற்றும் பம்மல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கல்குட்டைகளில் நீரை  உறிஞ்சி எடுக்க தமிழக அரசு முயற்சித்து வரு கிறது. அதே நேரத்தில் பணி துவக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் முழு மையாக நிறைவடையவில்லை. இதனால் மக்களின் வரிப் பணம்தான் வீணாகிறது. எனவே, அனகாபுத்தூர் பேரூராட்சியில் கிடப்பில் போடப்பட்ட 2 குடிநீர் தேக்க தொட்டி  பணிகளை விரைந்து முடிக்கவும், அந்த பகுதி மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர்  கிடைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி கள், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;