tamilnadu

img

தோழர் என்.சங்கரய்யா நினைவு தின ரத்ததானம்

விடுதலை போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யாவின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி ஞாயிறன்று (டிச.8) குரோம்பேட்டையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், பல்லாவரம் பகுதி ரத்ததான கழகம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மருத்துவர்கள் ராகவேலு, கே.காசி, பழனிவேல், இ.கருணாநிதி எம்எல்ஏ, சிபிஎம் தென்சென்னை மாவட்டச்  செயலாளர் ஆர்.வேல்முருகன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் தீ.சந்துரு, மாநில நிர்வாகி ஜானகி, பகுதி நிர்வாகிகள் சிந்தன், ஹேமக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.