tamilnadu

img

புதுச்சேரியில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு மின் கட்டண சலுகை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

சென்னை,பிப்.20- புதுச்சேரியில் தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என்றும் சரக்கு மற்றும் சேவை வரியை அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் முதலமைச்சர் வி.நாரயணசாமி பேசினார். தென்னிந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு இயற்கை எரி வாயுவை விநியோகம் செய்ய காரைக்கால் துறைமுகத்தில் ஏஜிபி நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ள எல்என்ஜி இறக்குமதி முனை யத்திற்கு சென்னையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டி அவர் பேசிதாவது: மத்திய அரசு எடுத்த சர்வேயில் சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம், சாலைப்போக்குவரத்து, சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளில் சிறிய மாநிலங்களில் புதுச்சேரி முத லிடத்தை பிடித்துள்ளது. இதற்காக 4 விருதுகள் கிடைத்துள்ளது. இந்தியா டுடே மாத இதழும் பலதுறைகளில் சிறந்த மாநிலமாக புதுச்சேரியை தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது. புதுச்சேரியில் புதிதாக தொழில்தொடங்க தமிழ கத்தில் உள்ள நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. சர்வதேச மற்றும் தேசிய அளவில் முதலீடு செய்ய முன்வரும் நிறு வனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும். தொழில்தொடங்க முன்வரும் நிறுவனங்கள் நேரடியாக தம்மை அணுகலாம். அதற்காக புதுச்சேரி அரசின் கதவுகள் திறந்தே இருக்கும். மின்சாரத்தில் இயங்கும் பேருந்து கள், பஞ்சாலைகள், வாசனை திர வியங்கள், பாரம்பரிய கைவினைப் பொருட்கள் உற்பத்தி ஆகிய வற்றுக்கு புதுச்சேரி பெயர்பெற்ற மாநிலம் ஆகும்.எந்த தொழில் நிறு வனங்கள் வந்தாலும் அவர்களுக்கு புதுச்சேரி அரசு விதிக்கும் ஒரே நிபந்தனை வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பதுதான்.  இவ்வாறு அவர் பேசினார்.
இறக்குமதி முனையம்
சென்னைக்கு தெற்கே 280 கி.மீ. தொலைவிலும் மற்றும் தமிழ்நாட்டின் உற்பத்திதொகுப்புகளுக்குஅருகில் அமைந்திருக்கும் புதியமுனையம் 300 கி.மீ. சுற்றளவிற்குள் மின் நிலையங்கள்,தொழிற் மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு இயற்கை எரிவாயுவை வழங்கும். வீடு களுக்கும் மற்றும் இதர நிறுவனங்க ளுக்கும் குழாய் மூலமாக இயற்கை எரிவாயுவை விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்களுக்கும் சேவையாற்றும் என்று ஏ.ஜி.பி தலைமைச் செயல் அதிகாரி ஆ.சிகல்மான் கூறினார். காரைக்கால் துறைமுகம் இனி தூய்மையான மற்றும் குறைந்த விலையில் எரிவாயுவை விநியோகம் செய்யும் மையாக திகழும் என்று எ.ஜி.பி. சரக்குபோக்குவரத்து பிரிவு தலைவர் கார்த்திக் சத்யமூர்த்தி தெரி வித்தார்.

;