சென்னை, ஆக.23- சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4வது வழித்தடம் அமைப் பதற்கு, இந்திய கடற்படைக்கு சொந்த மான நிலத்தை கையகப்படுத்த அனு மதி கிடைக்காததால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில், தற்போது சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் வரை 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப் பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங் களில் மின்சார ரயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் கடற்கரை – எழும்பூர் இடையே செல்லும் போது அதிக நேரம் காத்தி ருக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் விதமாக, சென்னை கடற்கரை – எழும்பூர் இடையில் 4வது வழித்தடம் அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை இருந்தது. அதன்பேரில், சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4.5 கி.மீ., தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பில் புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4வது வழித்தட பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கியது. முதலில், இந்தாண்டு மார்ச் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடை பெற்றது. 4வது வழித்தட பணிகளால் சென்னை கடற்கரை- வேளச்சேரி இடை யேயான ரயில் சேவை, சிந்தாதிரிப் பேட்டையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது. இதனால், சென்ட்ரல் வந்திறங்கும் பயணிகள் மயி லாப்பூர் வேளச்சேரிக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
4வது வழித்தட பணிகள் முடிந்து எப்போது வேளச்சேரி ரயில்கள் கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அவர்கள் கேள்வி எழுப்பிவருகிறார்கள். ஆனால், நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், பணிகளை விரைந்து முடிப் பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, எழும்பூர்- கடற்கரை இடையிலான 4வது வழித்தடத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 110 மீட்டர் நீளத்தை கைய கப்படுத்த வேண்டியுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் இதற்கு முறைப்படி அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அந்த குறிப்பிட்ட இடத்தில், பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடற்படைக்கு சொந்த மான இடத்தில், ரயில்வே தண்ட வாளம் வருவதால் கடற்படையின ருக்கு பாதுகாப்பு இருக்காது என கடற்படை நிர்வாகம் கூறுவதாகவும், இதனால் அந்த இடத்திற்கு அனு மதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவ தாகவும் சொல்லப்படுகிறது.