tamilnadu

img

ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்கத் தேர்தல்

சென்னை, ஜூன் 30- தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்க ளுக்கான தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்தி முடிப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வெள்ளியன்று நடைபெற்றது இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேசியதாவது:

  கடந்த காலங்களில் முறையாக உறுப்பினர்களின் சேர்க்கையும், தேர்த லும் நடத்தப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டு, தற்போது வரை உள்ள 1 கோடியே 90 லட்சத்து 26 ஆயிரத்து 152 உறுப்பி னர்களில் 63 லட்சத்து 22 ஆயிரத்து 288 உறுப்பினர்கள் தகுதியற்றவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

தற்போது தேர்தல் ஆணையத்தால் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஆதார், ரேசன் அட்டை இணைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதில் 59 சத விகிதம் இணைப்புப்பணி நிறைவு பெற்றுள்ளது. எஞ்சிய 41 சதவிகிதம் இணைக்கும் பணியை மேற்கொள்ள கால அவகாசம் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. 

கூட்டுறவு அமைப்புக்கள் மூலம் ரூ. 1 லட்சம் கோடி கடன்

கூட்டுறவு சங்கங்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதல மைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முறையாக தேர்தல் நடத்தப்படும்.

தமிழ்நாட்டில் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக, கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ. 1 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப் படும்.

கூட்டுறவுச் சங்கங்களின் பணியா ளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில் இருமாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் ‘பணியாளர் நாள்’ நிகழ்வு நடத்தப்படும்.

விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில் பெருநகரங்க ளில் காய்கனி அங்காடிகள் அமைக்கப் படுவதுடன் இதற்கென முக்கிய மாவட்டங்களை இணைத்து காய்கனி வழித்தடங்கள் உருவாக்கப்படும்.”

இவ்வாறு மொத்தம் 43 புதிய  அறிவிப்புகளை அமைச்சர் வெளி யிட்டார்.

;