tamilnadu

img

அரசு ஊழியர்கள் மறியல் - கைது.... கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்... ஆ.செல்வம்

சென்னை:
அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம், மறியல்- சிறைநிரப்பும் போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் கூறினார்.

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் முன்னாள்மாநிலத் தலைவரும், ஜாக்டோ -ஜியோ முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான மு. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீதான 17பி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற வேண்டும்.புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், நூலகர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டு தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3.50 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை கைவிட வேண்டும், 4.50 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பிப்ரவரி 2 செவ்வாய்க்கிழமையன்று முதல் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும்போராட்டத்தை தொடங்கினர்.இதன் ஒருபகுதியாக சென்னை எழிலகத்தில் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, மாநிலச் செயலாளர் வாசுகிஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.செல்வம் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “21 மாத நிலுவை ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை திரும்பத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்மறியல் போராட்டம் நடைபெறுகிறது.அரசு ஊழியர் சங்க போராட்ட அறிவிப்பை தொடர்ந்து 2019ல் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான 17பி குற்றக்குறிப்பா ணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறது. போராடாத அமைப்புகளை அழைத்துப் பேசி குற்றக் குறிப்பாணையை ரத்து செய்துள்ளது. அதேசமயம், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கை களை தீர்க்க வேண்டும். எனவே, தமிழக அரசு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தையும், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி  கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்று  கூறினார்.

இதனைத் தொடர்ந்து காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை யினர் தடுத்தனர். இதனால் தள்ள முள்ளு ஏற்பட்டது. மாநிலத் தலைவர்மு.அன்பரசு, செயலாளர் வாசுகி, வடசென்னை மாவட்டத் தலைவர் சுந்தரம்பாள், செயலாளர் அந்தோணிசாமி, தென்சென்னை மாவட்டத் தலைவர் டேனியல் ஜெயசிங் உள்ளிட்டோரை தரதரவென்று இழுத்துச் சென்று கைது செய்தனர்.

;