tamilnadu

img

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜன.11 தமிழகத்தில் சிஐடியு போராட்டம்....

சென்னை:
விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்ளை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில் 40 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனவரி 11 அன்று தமிழகத்தில் சிஐடியு சார்பில் மதிய உணவு மறுப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

சிஐடியு தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு கூட்டம் ஜனவரி  8 அன்று சென்னையில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதிசிட்டிபாபு, உதவி பொதுச் செயலளார்கள் வி.குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன் உட்பட மாநிலநிர்வாகிகளும், நிர்வாகக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.உழவுத்தொழிலையே  நாசமாக்கும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் 40 நாட்களுக்கும் மேலாகஉறுதியுடன் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிஐடியு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட் டில் உள்ள மத்திய-மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மாநிலம் முழுவதுமுள்ள தனியார் தொழிற்சாலைகளில் ஜனவரி 11 அன்று மதிய உணவு மறுப்பு போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழக மக்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென சிஐடியு வேண்டுகோள் விடுக்கிறது.

;