tamilnadu

img

சிஐடியு அமைப்பு தினம்...

சிஐடியு அமைப்பு தினமான சனிக்கிழமையன்று (மே 30) உளுந்தூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு  கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.தமிழ்மணி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஏ.வீராசாமி, நகரச் செயலாளர் கே.தங்கராசு, சரவணன், பிரபு, உமையாள், ஜெயசெல்வி உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

***************

உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், பொருளாளர் அ.வீராசாமி, கே.திருமுருகன், கே.சுந்தரபாண்டியன், சி.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

***************

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருக்கோவிலூர் மின்வாரிய அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார் கொடி ஏற்றினார்.

***************

கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் கொடியேற்றி, சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் டி.பழனிவேல், செயலாளர் பி.கருப்பையன், வி.திருமுருகன், வி.சுப்பராயன், வி.அனந்த நாராயணன், ஆர்.ஆளவந்தார், எஸ்.சாந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

***************

வேலூர் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் எம்பி.ராமச்சந்திரன் கொடியேற்றி னார். இதில் செயலாளர் எஸ்.பரசுராமன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, நிர்வாகிகள்  பழனியப்பன், நாகேந்திரன், மு.காசி, ஏ.குப்பு, டி.முரளி, எஸ்.செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***************

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  அலுவலகத்தில் செயலாளர் ஸ்ரீதர் கொடி ஏற்றினார். இதில் பொருளாளர் பீட்டர், சி.பி.எம். மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

***************

அசோக் லேலண்டு யூனிட் 2இல்  முன்னாள் மாவட்டப் பொருளாளர் மாதவன் கொடி ஏற்றினார். இதில் சிஐடியு அணித் தலைவர் ஆறுமுகம் செயலாளர் ஜோதியப்பா பொருளாளர் தரணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

***************

புதுவை முதலியார்பேட்டையில் உள்ள பிரதேசக் குழு அலுவலகத்தில் பிரதேச துணைத் தலைவர் ஜே.குணசேகரன் கொடி ஏற்றினார். இதில் தலைவர் கே. முருகன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரபுராஜ், நிர்வாகிகள் கலியமூர்த்தி, ராஜ்குமார், ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

***************

திருப்பத்தூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது.

***************