இந்திய சர்க்கஸின் முன்னோடியுமான ஜெமினி சங்கரன் தனது 99வது வயதில் காலமானார்.
ஒன்றிய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஜெமினி சர்க்கஸ் நிறுவனரும், இந்திய சர்க்கஸின் முன்னோடியுமான ஜெமினி சங்கரன் தனது 99வது வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.