சென்னை, ஜூன் 14- குழந்தைப்பருவ புற்று நோய் மீதான விழிப்புண ர்வை அகில இந்திய கார்பயணம் நடத்தப்பட்டது. மதுரையில் இருந்து இமயமலையில் உள்ள மிக உயரமான சிகரங்கள் வரை 10ஆயிரம் கி.மீ தூரத்திற்கு மீனாட்சி மிஷன் மருத்துவ மனை நடத்திய இந்த பயணம் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதியன்று தொடங்க ப்பட்டது. மதுரையிலிருந்து தொடங்கி ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் சிறீநகர் வரை சென்று மீண்டும் மதுரையில் இந்த பயணம் முடிவடைந்தது. இப்பயணம் 30 நாட்களில், 30 நகரங்களின் வழியாக நடை பெற்றது. “உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 3 இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படு கின்றனர். இதையறியும் பெற்றோர்கள் அதிர்ச்சியடை கின்றனர். ஆனால் உரிய நேரத்தில் கண்டறிய ப்பட்டால் குழந்தைப்பருவ புற்று நோயுள்ள 80 விழுக்காடு நோயாளிகளை முழுமையாக குணப்படுத்தி விட முடியும். எனவே இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் உரு வாக்க இந்த பயணம் நடத்தப்பட்டது என்று மீனாட்சி மிஷன் மருத்துவ மனையின் டாக்டர் குருசங்கர் கூறினார்.