tamilnadu

img

ஆதிக்க கலாசாரத்தில் பணியாற்றுகிறீர்கள் – சக நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கடிதம்  

ஆதிக்க கலாசாரத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறீர்கள், முழுமையாக தகர்த்தெறிய என்னால் இயலவில்லை என சென்னை உயர்நீதிமன்ற சக நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.  

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட சஞ்சீப் பானர்ஜி, கொரோனா காலத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான ஆக்சிஜன்கள் வழங்கவேண்டும், நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்ட சஞ்சீப் பானர்ஜி, சக நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 அந்த கடிதத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நீடிக்க முடியாததற்காக மன்னியுங்கள். என்னுடைய நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது அல்ல. நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தான் சிறப்பானவர்கள். நேரில் செல்லாமல் விடைபெற்றதற்கு மன்னியுங்கள். ஆதிக்க கலாசாரத்தில் பணியாற்றி கொண்டிருக்கிறீர்கள், முழுமையாக தகர்த்தெறிய என்னால் இயலவில்லை. சொந்த மாநிலம் என தமிழகத்தை 11 மாதமாக சொல்லி கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே விடைபெறுகிறேன் என்று கூறியுள்ளார். 

;