tamilnadu

சென்னை- மஸ்கட்: மேலும் ஒரு நேரடி விமானசேவை

சென்னை, ஜூலை 12- ஓமன் நாட்டு தலை நகர் மஸ்கட்டுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை இதுவரையில் ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மட்டுமே நடத்தி  வந்தது.இது தவிர மற்ற விமான நிறுவனங்கள் நேரடி விமான சேவை களை நடத்தாமல், சென்னையில் இருந்து மும்பை வழியாக மஸ்கட்டுக்கு விமான சேவைகளை இயக்கி வருகின்றன. ஆனால், பயணிகள் நேரடி விமானத்தில் பயணம் செய்யவே விரும்புவதால், ஓமன் ஏர்லைன்ஸ் விமானங்கள் எப்போதும் நிரம்பி வழிகிறது. அதில், டிக்கெட் கிடைப்பது கடினமாக உள்ளது.இந்த நிலையில் ஓமன் நாட்டில் உள்ள சலாம் ஏர்  விமான நிறுவனம், மஸ்கட்  - சென்னை - மஸ்கட் இடையே, புதிய நேரடி விமான சேவையை வெள்ளி முதல் தொடங்கி யுள்ளது. வாரத்தில், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் இயக்கப்படும், இந்த சலாம் ஏர் விமானம், மஸ்கட்டில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4:15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலை யம் வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு, மஸ்கட் புறப்பட்டு செல்கிறது.