சென்னை, டிச. 6- சென்னைக்கு அருகே தையூரில் சோதனை செய்வதற்காக ஹைப்பர் லூப் வழித்தடம் அமைக்கப்பட் டுள்ளது. இதில் சென்னை ஐஐடி சார்பில் சோதனை ஓட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங் களில் ஒரு மணி நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அது உண்மை தான். ஹைப்பர் லூப் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் 1000 கி.மீ. வரை பயணம் செய்யலாம். சென்னை ஐஐடி சார்பில் இதற்கான ஆய்வு தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
இந்நிலையில் இதற்கான பிரத்யேக வழித்தடமும் சென்னை ஐஐடி சார்பில் செங்கல் பட்டு மாவட்டம் தையூரில் அமைக்க ப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடி யோவை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள் ளார்.
இந்த வழித்தடமானது 410 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. ஹைப்பர் லூப் போக்குவரத்து என்பது வித்தியாசமான போக்கு வரத்தாகும். பொதுவாக மக்கள் காரில் பயணம் செய்யும் போது மணிக்கு 200 கிமீ வேகத்தில் அதிக பட்சமாக செல்ல முடியும்.
அதுவே ரயிலில் பயணம் செய்யும் போது மணிக்கு 500 கி.மீ. வேகத்தில் செல்லலாம். அதுவே விமானத்தில் பயணம் செய்யும் போது அதிகபட்ச மாக 700 முதல் 800 கி.மீ. வேகத்தில் செல்லலாம். ஆனால் இந்த வேகத்தை எல்லாம் மிஞ்சும் வகை யில் ஹைப்பர் லூப்பில் 1000 கி.மீ. வேகத்தில் பயணம் செய்ய முடியும்.
1000 கிமீ வேகம் என்பது எந்த ஒரு வாகனத்திலும் சாத்தியமில்லை ஆனால் ஹைப்பர்லூப்பை பயன் படுத்தினால் அது நிச்சயம் சாத்தி யம் தான். ஹைப்பர் லூப்பை பொறுத்தவரை ஒரு இடத்தில் நிறுத்துவது என்பது ஒரு கடினமான விஷயம் தான் என்று ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்து இருந்தனர். அதுவே ஹைப்பர் லூப்பை நிறுத்து வதற்கு கொஞ்சம் இடம் தேவைப் படும். உடனடியாக நிறுத்தினால் அது ஆபத்தாகும். அதுவே கொஞ்சம் முன்னதாக நிறுத்தினால் எந்த ஒரு அதிர்வும் மக்களுக்கு வராது என்று ஐஐடி மாணவர்கள் தெரிவித்துள் ளனர்.
இந்தியாவில் மும்பை புனே இடையே ஏற்கனவே ஹைப்பர்லூப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதேபோல் பஞ்சாபி லும் அமிர்தசரசில் இருந்து சண்டி கர் இடையே வரும் என கூறப்படு கிறது. இந்தியா தற்போது வளர்ந்து வரும் நாடாக இருந்து வருகிறது. ஹைப்பர்லூப் அமைக்க ஆயிரம் கோடிகள் செலவாகும். இதற்காக அரசு அனுமதி பெற வேண்டும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் என ஏராளமாக இருப்பதால் கொஞ்சம் சிக்கலான விஷயம் என்று மாணவர்கள் தெரிவித்துள் ளனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் கூறுகையில், ஒரு ஹைப்பர் லூப்பில் எத்தனை பேர் பயணம் செய்யலாம் என்பது அந்த ஹைப்பர் லூப்பின் பாட்கள் அதா வது பெட்டிகள் என அதை அழைப் பார்கள். அதை பொறுத்து தான் பயணம் செய்ய முடியும். ஒரு ஹைப்பர் லூப்பில் 40 பேர் வரை பயணம் செய்யலாம். அதிகபட்ச மாக 100 பேர் வரை பயணம் செய்ய லாம் என்று அவர்கள் கூறினர்.