tamilnadu

img

அடுத்த 24 மணிநேரத்தில் மழை வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செவ்வாயன்று  (ஜூலை 14) கூறியதாவது:“தமிழகத்தில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், தருமபுரி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திருவள்ளூர், வேலூர், தஞ்சாகூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணிநேரத்தில் கடலோர மாவட் டங்கள், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப் படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

;