tamilnadu

img

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,அக்.5- தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில்  நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அக்.6 மற்றும் 7 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்பு ரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமை (அக்.8) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான  மழை பெய்யக்கூடும் என்றும்,  சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,  வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்லூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சா வூர், திருவாரூர், நாகை, மயிலாடு துறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை யில், வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின்  ஒரு சில பகுதிகளில் இடி மின்னலு டன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

;