சென்னை, பிப். 26- விருகம்பாக்கம் அருகே இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. விருகம்பாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் கைக்காங் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராதிகா. தனியார் நிறுவ னத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று அதிகாலை வேலைக்கு செல்வதற்காக கே.கே.நகர் அமுதம் பஸ் நிறுத் தத்தில் நின்றுகொண்டு செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ராதிகாவின் செல்போனை பறித்து தப்பி சென்ற னர்.