tamilnadu

img

தனியாருக்கு தாரை வார்ப்பதா? பாதுகாப்புத் துறை ஊழியர்கள் ஆவேசம்

சென்னை:
219 ஆண்டு பழமைவாய்ந்த பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழிற் சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் மத்திய மோடி அரசைக் கண்டித்து நாடு முழுவதும் அகில பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனம் சார்பில் காந்தி சிலை முன்பு “தேசத்தை காப்போம் பாதுகாப்பு துறை தொழிற்சாலைகளை பாதுகாப்போம்” எனும் முழக் கத்தோடு உண்ணாநிலை போராட்டம் வெள்ளியன்று (அக். 2) நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக ஆவடி 
மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலை அருகே  உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஓசிஎப் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார், ஏ.முகம்மது மீரா (தொமுச), டி.சதாசிவம் (பாரதிய மஸ்தூர் யூனியன்), எம்.மணி (ஐ.என்.டி.யு.சி), கே.கிருபாகரன் (ஏஇயூ) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.