tamilnadu

மக்கள் இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பு பங்கேற்போர் மீது வழக்கு- கைது சிபிஎம் கண்டனம்

சென்னை, நவ.24-  மக்கள் பிரச்சனைகள் மீது நடை பெறும் இயக்கங்களுக்கு அனுமதி மறுப்பதும் இயக்கங்களில் பங்கேற் போர் மீது வழக்கு பதிந்து, கைது செய்யும் தமிழக காவல்துறையின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள் ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச்  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாதர், வாலிபர், மாணவர் அமைப்புகள், பொதுநல அமைப்புகள் ஆகியவை நியாய மான கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகை யில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தர்ணா போன்ற இயக்கங்களை நடத்த காவல்துறையின் அனுமதி கோரி னால் காவல்துறை அனுமதி வழங்கு வதில்லை. அப்படியே வழங்கினா லும் கடைசி நேரத்தில் அனுமதி ரத்து செய்யப்படுகிறது. அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற ஜனநாயக உரி மைப்படி இயக்கங்கள் நடத்து வதற்கு கடைசி வரை இழுத்தடிப்பு செய்வதும், அனுமதி மறுப்பதும், மீறி நடத்தினால் கைது செய்வது, வழக்கு பதிவு செய்வது போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் தமிழக காவல்துறையின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு வன்மை யான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சமீபத்தில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி, பல அமைப்புகளின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் இரண்டு தினங்க ளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற் கான அனுமதியை மறுத்துவிட்டு, தமி ழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைச்சிறுத்தை கள் கட்சியின் தலைவர் திருமாவள வன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 1800-க்கும் மேற்பட்டோர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதைப்போன்று, சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு மென அமைதியான முறையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாண வர் சங்கம் மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க தோழர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் உரி மைக்கு போராடுகிற பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், தொழி லாளர்கள், விவசாயிகள், வியா பாரிகள், ஊழியர்கள் என அனைத் துப் பிரிவினர் மீதும் பல்லாயிரக்க ணக்கான வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளன. ஏற்கனவே,கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து போரா டிய 25 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தேச துரோக பிரிவு உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. தமிழகத்தில் உள்ள அனைவர் மீதும் வழக்குகள் பதிவு செய்து குற்ற வாளிகளாக மாற்றிட வேண்டும் என்ற நோக்கோடு தமிழக காவல்துறை யும், தமிழக அரசும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதேவேளையில், சமூக விரோதச் செயல்கள், சட்டம்  ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந் தைகள் மீதான பாலியல் வன்முறை களில் ஈடுபடுவோர் மீது உரிய நட வடிக்கை எடுப்பதிலும், கைது செய்து தண்டனை பெற்றுத்தருவதிலும் காவல்துறையும் அரசும் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிக்கும் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையின் அராஜகப்போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், ஜனநாயக இயக் கங்களில் ஈடுபட்டோர் மீது போடப் பட்டுள்ள அனைத்து வழக்குகளை யும் நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறது. எனவே, அடிப்படை ஜனநாயக உரிமைகளை மறுக்கும் காவல்துறை யின் இத்தகைய போக்கை மாற்றிக் கொண்டு, ஜனநாயக ரீதியில் நடை பெறும் இயக்கங்களுக்கு அனுமதி வழங்க அறிவுறுத்த வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;