tamilnadu

img

5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்க! ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜன.13- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியிலும், தூத்துக்குடி யிலும் சனிக்கிழமை ஆா்ப்பாட் டம் நடைபெற்றது. 5ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு களுக்கு அறிவித்துள்ள பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், தேசிய கல்விக் கொள் கையை கைவிடவேண்டும், கடந்த காலங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் பங்கேற்ற ஆசி ரியா்களின் மீதான ஒழுங்கு நட வடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும். பள்ளி தொடா்பான அனைத்துப் புள்ளி விவரங்க ளையும் கல்வியியல் மேலாண் மைத் தகவல் மையத்தில் பதி வேற்றம் செய்வதற்கான அடிப் படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த மாதம் முதல் பல் வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதி யாக மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டம் பாளை யங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க மாவட்டத் தலைவர் பி.ராஜ்குமார் தலைமை தாங்கினார், மாநில செயற்குழு உறுப்பினர் மு.பிரம்ம நாயகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பால்ராஜ், பொருளாளர் ஞா.பால்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ப. நாகராஜன் ஆகியோர் கோரி க்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

இதுபோல் தேசிய கல்விக் கொள்கை 2019-யை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி தூத்துக்குடி யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் சார்பில், தூத் துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பவுல் ஆபிர காம் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் செல்வராஜ் கோரிக்கை கள் குறித்தும், மாநில துணைத் தலைவர் அக்சீலியா மொ்லின் உஷா ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்தும் பேசினர். இதில், மாவட்டப் பொருளாளர் பாப் ஹையஸ் உள்பட பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர்.
 

;