tamilnadu

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா இல்லை சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை, மார்ச் 9- காஞ்சிபுரம் என்ஜினீயர் மனைவி மற்றும்  அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15  வயது சிறுவன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகா தாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 68 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் 59 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமனில் இருந்து வந்த  காஞ்சிபுரம் பொறியாளருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியா னது. இதையடுத்து அவர் சென்னை அரசு  பொதுமருத்துவமனையில் தனிமைப டுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வரு கிறார். அவருடன் விமானத்தில் வந்தவர்கள் கண்காணிப்பில் உள்ளனர். அவரது மனை விக்கு ரத்த மாதிரி எடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த  15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி  இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கிண்டி கிங் ஆய்வு  மையத்தில் ஆய்வு செய்யப்பட்டு திங்க ளன்று (மார்ச் 9) முடிவு தெரிவிக்கப்பட்டன. அதில் காஞ்சிபுரம் பொறியாளர் மனைவிக்கு  பாதிப்பு இல்லை என உறுதி செய்யப் பட்டுள்ளது. அதேபோல சிறுவனுக்கும் பாதிப்பு இல்லை என முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

;