tamilnadu

img

கட்டிடம் மற்றும் கட்டுமான தொழில், நிலவியல் ஆய்வு பணி

கட்டிடம் மற்றும் கட்டுமான தொழில், நிலவியல் ஆய்வு பணிகளுக்கு  அதிக அளவிலான வல்லுநர்களை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சியில் எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமும், மத்திய அரசின்  அறிவியல் சார்ந்த தொழில் ஆராய்ச்சி மையமும் இணைந்துள்ளன.  இதற்கான ஒப்பந்தத்தில் எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியியல் தொழில்நுட்ப இயக்குனர் முனைவர் சி.முத்தமிழ்ச்செல்வன், சி.எஸ்.ஐ.ஆர் மத்திய கட்டிய ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் எஸ்.ஆர்.எம் கட்டிட பொறியியல் துறை மற்றும் சிபிஆர்ஐ பேராசிரியர்கள் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனர்.