பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை தலைமை பொது மேலாளர் அலுவலகம் அருகே மாவட்ட தலைவர் கொளஞ்சியப்பன், ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் சுப்பிரமணியன், செல்வம், மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.