தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மூத்த ஆசிரியர் கு.பூபாலன் எழுதிய தமிழக வரலாற்றில் ஆசிரியர் இயக்கம் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை சூளைமேட்டில் வியாழனன்று (பிப்.6) நடைபெற்றது. சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் நூலை வெளியிட க.நா.இளங்கோவன், இரா.சக்திவேல், க.ராஜேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் கே.பி.ஓ சுரேஷ் தலைமை தாங்கினார். இலஞ்சி கு.மாரியப்பன், ச.செல்லத்துரை, ரெ.விஜயகுமார், சி.வள்ளிவேலு, வி.லீலாவதி, ஜி.செல்வா, ப.மனோகரன், சி.சிவக்குமார் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.