சிஐடியு முயற்சியால் சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட 11 ஆண்டுகளில் முதல்முறையாக தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிரந்தர பணியாளர்களுக்கு ரூ.15,000 போனஸ் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கம்(சிஐடியு) சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொடர் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அது நிறைவேற்றப்பட்டுள்ளது.