tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : கலைஞர் மு.கருணாநிதி பிறந்தநாள்....

கலைஞர் கருணாநிதி 1924ஆம் ஆண்டுஜுன் மாதம் 3ஆம் நாள் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தவர்.

இவர் சட்டமன்ற உறுப்பினர், சட்டமேலவை உறுப்பினர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், அமைச்சர், முதலமைச்சர் எனப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.மாநிலத்தின் வளர்ச்சிக்காக, கிராமப்புறங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இலவச காப்பீடு திட்டங்கள், இட ஒதுக்கீடு முறையைஅமல்படுத்தி சமூக நீதியைக் காத்தது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களின் விளைவாக அருந்ததியர் உள் இடஒதுக்கீடு 3 விழுக்காடு அமல்படுத்தியது ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தொழில்மயமாக்குதலுக்கான நடவடிக்கைகள் போன்ற பலவற்றையும் மேற்கொண்டார். 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15 நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும் படைத்துள்ளார். மேலும் “நண்பனுக்கு”, “உடன்பிறப்பே” என்னும் தலைப்புகளில் 7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை தவிர தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக வெளிவந்திருக்கின்றன.இவர் 60 திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார்.  ஏராளமான நாடகங்களை எழுதி அரங்கேற்றினார்.கலைஞர் தனது வாழ்க்கைவரலாற்றை நெஞ்சுக்கு நீதி என்னும் தலைப்பில் தினமணி கதிர் (முதலாவது பகுதி), முரசொலி, குங்குமம் ஆகிய இதழ்களில் தொடர்கட்டுரையாக எழுதினார். தமிழக வரலாற்றில் அழியாப்புகழ் பெற்ற கலைஞர் மு.கருணாநிதி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று  சென்னையில் காலமானார்.

 பெரணமல்லூர் சேகரன்

;